அமெரிக்காவுடன் இன்னும் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை: இலங்கை அரசாங்கம்
அமெரிக்காவுடன் பரஸ்பர வரிகள் தொடர்பாக கையெழுத்திடுவதற்கு இலங்கை இன்னும் இறுதி உடன்பாட்டை எட்டவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் இன்னும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
17 சுற்று பேச்சுவார்த்தைகள்
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இதுவரை 17 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தைகள் மூலம் இலங்கை வரிகளை 44 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக் குறைக்க முடிந்துள்ளது.

ஏற்றுமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள்
அத்துடன், 2025 நவம்பர் 13 அன்று ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்ட உத்தரவில், இலங்கையால் ஏற்றுமதி செய்யப்பட்ட சில உணவுப் பொருட்களை வரிகளிலிருந்து பூஜ்ஜியமாகக் கொண்டு வந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டில் 20க்கும் மேற்பட்ட அரச தலைவர்கள் மற்றும் உயர் மட்டத் தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |