முச்சக்கரவண்டி கட்டணங்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு
முச்சக்கரவண்டி கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றியம் அறிவித்துள்ளது.
கட்டண திருத்தம் தொடர்பில் கிரமமான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என குறித்த ஒன்றியத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
கட்டண ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள்
மேல் மாகாணசபையில் இது தொடர்பிலான ஓர் குழு நியமிக்கப்பட்ட போதிலும் துரதிஷ்டவசமாக கட்டண ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
எவ்வாறு எனினும் அரசாங்கத்தின் எரிபொருள் விலை மாற்றத்திற்கு ஏற்ற வகையில் கட்டண திருத்தத்தை மேற்கொள்வதில்லை என ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாரதிகளிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
வாடிக்கையாளர்களுடன் பேசி கட்டணம் தொடர்பில் தீர்மானிக்குமாறு முச்சக்கரவண்டி சாரதிகளிடம் கோரியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நள்ளிரவுடன் நடைமுறைக்கு வரும் வகையில் பெட்ரோல், டீசல் என்பனவற்றின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
