எரிபொருள் தேடும் பணியிலும் அமைச்சர் சப்ரி ஈடுபடுத்தப்படலாம்!
இலங்கை நாட்டின் தற்போதைய நெருக்குவார நிலை இரண்டு வருடங்களாவது தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிதியமைச்சர் அலி சப்ரியின் இந்த கருத்தை இன்றைய ஆங்கில ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
1979 ஆம் ஆண்டு ஈரானியப் புரட்சியின் நிச்சயமற்ற மாதங்களில், ஜே.ஆர். ஜெயவர்த்தன அரசாங்கம் இதேபோன்ற நெருக்கடியை எதிர்கொண்டது.
எனினும் ஸிம்பாப்வேயில் இடம்பெற்ற அணிசேரா மாநாட்டில் பங்கேற்றிருந்த அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஷாஹூ்ல் ஹமீட்டுக்கு ஜே ஆரிடம் இருந்து சென்ற அழைப்பில் எங்கிருந்தாவது எரிபொருளை தேடுமாறு கேட்கப்பட்டது. அவர், லிபியாவுக்கும் சென்று அங்கு கர்னல் முஹம்மர் கடாபியைச் சந்தித்தார்.
இதன்போது ஒரு இலங்கை அமைச்சரை வெறுங்கையுடன் திரும்ப விடமாட்டேன் என்று கடாபி தெரிவித்தார்.
அணிசேரா ஒற்றுமையின் நாட்கள் அவை. போக்குவரத்து அமைச்சர் எம்.எச். முகமது சவுதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டார்.
மேலும் ஒரு நெருக்கடி தவிர்க்கப்பட்டது. எனினும் இந்த அரசாங்கம் அதன் உள்நாட்டுக் கொள்கைகளால் இந்த எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளிலிருந்து தன்னைத் தூர விலக்கி வைத்துள்ளது.
இந்தநிலையில் இந்த கட்டத்தில் சில வேளைகளில வோஷிங்டனில் இருக்கும் அமைச்சர் அலி சப்ரி, மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று நிலைமையைக் காப்பாற்ற முயற்சி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



