மறு அறிவித்தல் வரை இலங்கையில் முடங்குகிறதா தொலைத்தொடர்பு..! வெளியானது உண்மை தகவல்
தொலைத்தொடர்பு
இலங்கையில் நாளை முதல் தொலைத்தொடர்பு மட்டுப்படுத்தப்படுவது அல்லது முடக்கப்படுவது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான உண்மைத் தகவலை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தலைவர் ஜயந்த டி சில்வா வெளியிட்டுள்ளார்.

உண்மைத் தகவல்
இது குறித்து ஊடகமொன்றுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில், நாளை காலை 6 மணி முதல் மறு அறிவித்தல் வரை தொலைபேசி சேவையை குரல் தொடர்புக்கு மட்டுப்படுத்துமாறு தொலைபேசி சேவை வழங்குனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பரப்பப்படும் கடிதத்தில் உண்மையில்லை.
தொலைத்தொடர்பு நடவடிக்கைகளை எந்த வகையிலும் கட்டுப்படுத்தும் வகையிலான கடிதம் வெளியிடப்படவில்லை.

இது தொடர்பில் ஜனாதிபதியும் கேட்டறிந்தார். எனவே இந்த விடயத்தை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
மேலும், சமூக ஊடக வலையமைப்புகள் எந்த வகையிலும் முடக்கப்பட மாட்டாது என குறிப்பிட்டுள்ளார்.
ஜனனி உயிருடன் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடையும் குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. Cineulagam
பாகிஸ்தான் T20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ICC உயர் அதிகாரி: சர்ச்சை கிளப்பிய நிகழ்வு News Lankasri