தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளுடன் நேரடி பேச்சுவார்த்தைகள் நடத்தமாட்டோம்: அரசு திட்டவட்டம்
உலக தமிழர் பேரவை போன்ற தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளுடன் நேரடி பேச்சுவார்த்தைகள் இருக்காது என வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜி. எல். பீரிஸ்(G. L. Peiris) தெரிவித்துள்ளார்.
நாட்டில் தடை செய்யப்பட்ட நாடு கடந்த தமிழ் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தப்போவதில்லை என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அதேநேரம் உள்நாட்டுப் பிரச்சனைகள் உள்ளக பொறிமுறையின் ஊடாக தீர்க்கப்பட வேண்டும் என்றும் இது தொடர்பாகப் புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தப் போவதாகவும் ஐ.நா. பொதுச் செயலாளரிடம் ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில் வெளிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் மேற்கூறியவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் நல்லிணக்க செயன்முறையின் ஒரு பகுதியாக அரசு சார்பற்ற அமைப்புக்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் புலம்பெயர் உறுப்பினர்களுடன் கலந்துரையாடத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
அந்தவகையில் 2021 ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாட்டிலிருந்து நாடு திரும்பியதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களைச் சந்திப்பர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உலக தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை, கனேடிய தமிழ் காங்கிரஸ், அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், கனேடிய தமிழ்த் தேசிய கவுன்சில், தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஆகியன தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
