தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் மத்தியில் முரண்பாடில்லை: நிமால் புஞ்சிஹேவா
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் மத்தியில் எவ்வித முரண்பாடுகளும் கிடையாது என ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்துவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் சட்ட ரீதியான அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் நடத்தி முடிக்கும் வரையில் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளில் எவ்வித மாற்றமும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
வர்த்தமானி அறிவித்தல்
ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மத்தியில் பிளவினை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கான கட்டுப்பணம் ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மனு தாக்கல்
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரச சொத்துக்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடந்து முடியும் வரையில் அரசாங்க ஊழியர்கள் இடமாற்றம் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது
ஏற்கனவே சில அரசியல் கட்சிகளும், சுயாதீன குழுக்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளமை குறிபொஇடத்தக்கது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
