கிரிக்கெட் தடை சர்ச்சை: கோப் குழுவின் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை
கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கோப் குழு தலைவரின் முறையற்ற நடவடிக்கையை காரணமாகவே, இந் நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் வாரத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுகின்றது.
குறித்த தகவலை ஐக்கிய மக்கள் சக்தி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணை
இது தொடர்பான கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கும் கோப் குழுவுக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது கோப் குழு தலைவரின் முறையற்ற நடவடிக்கை ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டுக்கள் எழுந்துள்ளது.
இந்நிலையிலேயே, கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri