ஹரிணி அமரசூரியவுக்கு நம்பிக்கையில்லாப் பிரேரணை: ஆளுங்கட்சி கோரிக்கை
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணை கையெழுத்திடப்பட்டிருந்தால் மேலும் தாமதப்படுத்தாமல் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சியிடம் ஆளும் கட்சியினர் கேட்டுக்கொண்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று (22.01.2026) விசேட கூற்றொன்றை முன்வைத்து சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும், ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவும் எதிர்க்கட்சியிடம் இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை
இது தொடர்பில், அமைச்சர் பிமல் ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில்,
பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கையெழுத்திடப்படுவதாக அண்மைக் காலமாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன.
பிரதமர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று கொண்டுவரப்படுவதாக கூறப்படுவது மிகவும் முக்கியமான விடயமாகும்.

இத்தகைய நிலையில், அரசாங்கத்தினால் இந்த வாரத்தின் நாடாளுமன்ற அமர்வுக்கான நான்கு நாட்களுக்கு நிகழ்ச்சி நிரல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. எனினும், நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை தயாரித்து அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்காமல் இருப்பது பிரச்சினைக்குரியதே.
அந்த வகையில் எதிர்க்கட்சி அதனை முன்வைத்தால் 22 மற்றும் 23ஆம் திகதிகளில் அதற்கான விவாதத்திற்கு நேரத்தை ஒதுக்க முடியும். இதனால் அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படுமா? இல்லையா? என்பதை எதிர்க்கட்சி தெரிவிக்க வேண்டும். பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கையெழுத்திடப்பட்டுள்ளது என்றால் அதனை சபையில் சமர்ப்பியுங்கள். இல்லாவிட்டால் அது நாட்டின் ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அது சமர்ப்பிக்கப்படுமா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கட்சியினரின் பதில்
இதன்போது பதிலளித்த எதிர்க்கட்சியின் பிரதம கொரடா கயந்த கருணாதிலக்க, இது எதிர்க்கட்சியின் பணியாகும். நாம் கலந்துரையாடி தேவையான நேரத்தில் அதற்கான நடவடிக்கை எடுப்போம். அதன்படி பொருத்தமான நேரத்தில் அதனை நாம் முன்வைப்போம் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இது தொடர்பில் தெரிவிக்கையில்,
பிரதமருக்கு எதிராகவே எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா பிரேரணையை கையெழுத்திட்டுள்ளது. கல்வியமைச்சர் என்ற வகையில், கல்வி மறுசீரமைப்பு தொடர்பான விடயங்களை அடிப்படையாகக் கொண்டே அவருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுகின்றது.

அவ்வாறானால் நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் வியாழன், வெள்ளிக்கிழைமைகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொண்டால் அதன்போது கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கத்தின் தெளிவான பதிலை வழங்க நாம் எதிர்பார்த்துள்ளோம்.
ஆனால் அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படாமல், அது தொடர்பான விவாதம் நடத்தப்படாவிட்டால் குறித்த இரண்டு நாட்களிலும் கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நடத்துவதற்கும் அரசாங்கம் தயாராகவே உள்ளது என அழுத்தமாக தெரிவித்துள்ளார்.
நேட்டோ தலைவருடன் சந்திப்பு... பிரித்தானியா உட்பட 8 நாடுகள் மீதான வரியை ரத்து செய்த ட்ரம்ப் News Lankasri
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan