களுவாஞ்சிகுடியில் மூன்று வருடங்களுக்கு மோலாக இடிந்து விழுந்துள்ள வடிகான்:விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
மட்டக்களப்பு- மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட களுவாஞ்சிகுடி பொதுச்சந்தைக்கு முன்னால் அமைந்துள்ள வடிகான் உடைந்து விழுந்துள்ளதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
மிக நீண்ட காலமாக இந்த வடிகான் உடைந்துள்ளதனால் அந்த வடிகானில் தொடர்ச்சியாக நீர்தேங்கிக் காணப்பட்டுக் கொண்டே வருகின்றது.
இதனால் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் உள்ளதாகவும் பொதுச் சந்தை வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கோரிக்கை
இந்நிலையில் சுமார் மூன்று வருடங்களாக இந்த வடிகான் உடைந்த நிலையில் காணப்படுவதாகவும், இதனை புனரமைத்துத் தருமாறு பலதடவைகள் கமநல அமைப்பினரிடமும், கமநல சேவைத் திணைக்களத்தினரிடமும், கோரிக்கை விடுத்திருந்தபோதும் தமது அந்த முயற்சி இன்னும் பயனளிக்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இதனிடையில் அண்மையில் முச்சக்கர வண்டி ஒன்று இந்த வடிகானிற்குள் விழுந்து விபத்துக்குள்ளானதாகவும், அதனைச் செலுத்திச் சென்றவர் உயிர் தப்பியதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே கமநல அமைப்போ, கமநல சேவைத் திணைக்களமோ அல்லது பிரதேச சபையோ, யாராவது முன்வந்து உடனடியாக புனரமைப்புச் செய்வதோடு, நீர் தேங்கும் நிலமையும் சீர் செய்து தருமாறு களுவாஞ்சிக்குடி பொதுச் சந்தை வியாபாரிகளும் பாதசாரிகளும், அந்தப் பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடாத எம்.பிக்கள்:அமைச்சர் வெளியிட்ட பகிரங்க தகவல்






எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam