அநுரவிடம் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது! தமிழரசின் வேட்பாளர் சுட்டிக்காட்டு
தமிழர்களுக்கு என்ன தீர்வு என வெளிப்படையாகக் கூறாத ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியிடம் இருந்து மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட வேட்பாளர் சந்திரஹாசன் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர் அறிமுக விழாவில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குழப்பங்களுக்கு மத்தியில் நாடாளுமன்றத் தேர்தல்
மேலும் தெரிவிக்கையில், “தென்பகுதியில் ஒரு மாற்றம் இடம்பெற்றிருக்கின்றது. ஊழலுக்கு எதிரான அரசு வேண்டும், எல்லோரும் சமமானவர்கள், எல்லோரும் இலங்கை மக்கள் என்று ஒரு மாற்றத்துக்கான அலை காணப்படுகின்ற அதேநேரம் தமிழர்கள் மத்தியில் பல குழப்பங்கள் காணப்படுகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பம், கட்சிக்குள் குழப்பம் என நாம் பிரிந்து நிற்கின்றோம்.
இந்தக் குழப்பங்களுக்கு மத்தியில் நாடாளுமன்றத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது.
இளைஞர்கள் தற்போது கூறுகின்றார்கள் தேசிய மக்கள் சக்தியானது சமத்துவமான ஓர் அரசியலைப் பேசுகின்றது, புதிய ஓர் அரசியல் கலாசாரத்தை முன்னெடுக்கின்றது என்று. ஆனால், இடதுசாரி கட்சிகள் சமத்துவம் பேசுவது என்பது புதியதல்ல.
தமிழ் மக்கள் இரண்டாம் தரப்பு
அந்தச் சமத்துவ அரசியலிலும் கவலையான விடயம் தமிழ் மக்களை இரண்டாம் தரப்பாகப் பார்ப்பது.

அதிலிருந்து அவர்களிடம் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது.
அவர்கள் தமிழருடைய தீர்வு தொடர்பான தெளிவான விடயத்தை இதுவரையிலும் முன்வைக்கவில்லை. அவர்கள் அதை வெளிப்படையாகப் கூறுவதற்குப் பயப்படுகின்றார்கள். மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்" என்றும் யாழ். மாவட்ட வேட்பாளர் சந்திரஹாசன் இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam
சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri