ஹமாஸ் அமைப்புடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தை இல்லை: நெதன்யாகு திட்டவட்டம்
ஹமாஸ் அமைப்பினரிடமிருந்து வரும் ஏமாற்றும் கோரிக்கைகளை ஏற்க முடியாத நிலையில் போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் செல்லாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பினருடன் நடைபெற்ற போர்நிறுத்த பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சர்வதேச ஆணைகள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாலஸ்தீனியர்களுக்கு தனிநாடு அந்தஸ்து தொடர்பான சர்வதேச ஆணைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது.
பாலஸ்தீனத்தை ஒருதலைபட்சமாக அங்கீகரிப்பதை எனது தலைமையிலான இஸ்ரேல் தொடர்ந்து கடுமையாக எதிர்க்கும்.
முன்நிபந்தனைகள் இல்லாமல் இரு தரப்புக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே ஒரு பயனுள்ள ஏற்பாட்டை செய்ய முடியும் என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மைனா படத்தில் போலீஸ் ரோலில் நடித்த இந்த நடிகரை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

சிறிய தீவில் 2 சடலங்களும் 39 புலம்பெயர் மக்களும்... கண்டுபிடித்த கிரேக்க கடலோர காவல்படை News Lankasri
