பொருளாதார பிரச்சினைக்கு எந்த வேட்பாளரிடமும் தீர்வு இல்லை: பேராசிரியர் வசந்த அத்துக்கோரள
நாடு எதிர்நோக்கி வரும் பொருளாதார பிரச்சினைக்கு எந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளரிடமும் தீர்வு இல்லை என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் விஞ்ஞான மற்றும் புள்ளிவிபரவியல் கற்கை பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்பக்கூடிய வகையிலான கொள்கைகளை எந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளரும் சமர்ப்பிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்பக்கூடிய விடயங்கள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கொள்கை பிரகடனத்தில் உள்ளடக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார சமூக மற்றும் அரசியல் கட்டமைப்பு
கொள்கை பிரகடனங்களில் பொருளாதார சமூக மற்றும் அரசியல் கட்டமைப்பு தொடர்பிலான பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 5 ஆண்டு காலத்தில் நாட்டில் நிலவக்கூடிய பொருளாதார நெருக்கடி நிலைமைகளை வெற்றி கொள்வதற்கான வழிமுறைகளை எந்த ஒரு வேட்பாளரும் முன் வைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு ஓர் தீர்வு திட்டத்தை முன் வைக்காமை கவலை அளிப்பதாக பேராசிரியர் அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார வளர்ச்சி
மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் வகையில் அரசியல் கட்சிகளினால் முன்மொழியப்பட்டுள்ள யோசனைகள் எந்த வகையிலும் ஏற்புடையதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை 10 வீதமாக அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு தேவையான செயல்திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என பேராசிரியர் அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
