குறைக்கப்படவுள்ள பேருந்து கட்டணம்!
புதிய இணைப்பு
தேசிய போக்குவரத்து ஆணையத்தின் (NTC) படி, ஜூலை 04, 2025 (வெள்ளிக்கிழமை) முதல் பேருந்து கட்டணங்களை 0.55% குறைப்பதற்கு போக்குவரத்து அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டில் வருடாந்திர பேருந்து கட்டண திருத்தம் 2.5% குறைக்கப்படும் என்று அவதானிக்கப்பட்டது. எனினும் எரிபொருள் விலை சூத்திரத்தின்படி மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் நடந்ததால், எரிபொருள் விலையை சரிசெய்த பிறகு புதிய பேருந்து கட்டண திருத்தத்தை 0.55% குறைக்க முடிவு செய்யப்பட்டதாக ஆணையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இருப்பினும், குறைந்தபட்ச கட்டணத்தில் எந்த திருத்தமும் இருக்காது என்றும் ஆணையம் கூறியுள்ளது.
அதன்படி, இந்த புதிய பேருந்து கட்டணம் ஜூலை 4 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஆணையம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
புதிய எரிபொருள் விலை உயர்வு இடம்பெற்றுள்ள போதிலும், பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க இன்று இந்த விடயத்தை உறுதி செய்துள்ளார். இன்றைய தினம் நடைபப்ற ஊடக சந்திப்பில் அவர்இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
நேற்றிரவு அறிவிக்கப்பட்ட எரிபொருள் விலை உயர்வையடுத்து, இன்று கட்டண திருத்தம் பற்றி பரிசீலிக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும், அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் விலை நிர்ணய சூத்திரத்தை பயன்படுத்தி புதிய கட்டணங்கள் கணக்கிடப்பட்டதாகவும் கூறினார்.
எரிபொருள் விலை நிர்ணய சூத்திரத்தின்படி கணக்கிடப்பட்ட போதும், தற்போதைய சூழ்நிலைக்கேற்ப பேருந்து கட்டணங்களை மாற்றத் தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை இந்த கட்டண மாற்ற முன்மொழிவு விமர்சிக்கப்பட்ட போதும், கணக்கீட்டுப்படி கட்டண உயர்வு தேவையற்றது எனத் தெரிய வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
