இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை
இலங்கையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினரை கைது செய்வதில் உரிய நாடுகளுடன் நிலவும் இருதரப்பு ஒத்துழைப்புக்கு எவ்விதத்திலும் தடையாக இருக்காது என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
“சீனாவில் இருந்து மட்டுமின்றி வேறு நாடுகளில் இருந்தும் வருகை தரும் நபர்கள் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
சட்டத்தின் கீழ் கைது
பின்னர், அந்த நாட்டில் நிலவும் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுகின்றனர்.

இதனால், அந்தந்த நாடுகளுடன் செய்துகொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அல்லது கூட்டாகச் செயற்படுவதில் எந்தவித சிக்கலும் ஏற்படுவதில்லை.
சட்டவிரோதச் செயல்களைத் தடுத்து நிறுத்துவது மாத்திரமின்றி, அறிவுப் பரிமாற்றம், ஆற்றல் மேம்பாடு போன்றவையும் அதன் கீழ் இடம்பெற்றுள்ளன.
அதன் பின்னர் இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO..
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri