சிறைக்குச் செல்ல போகும் நாமல் உட்பட இன்னும் சில முக்கிய புள்ளிகள்
இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலை நோக்கும்போது, முன்னாள் அரசியல்வாதிகள் பலர் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், இம்மாதம் 12ஆம் திகதிக்கு முன்னர் தான் கைது செய்யப்படலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவுக்கு பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நாட்டில் இடம்பெற்று வரும் முக்கிய அரசியல் பிரமுகர்களின் கைது மற்றும் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடர்பான மேலும் பல முக்கிய தகவல்களை லங்காசிறியின் ‘நாட்டு நடப்பு’ நிகழ்ச்சியின் ஊடாக விரிவாகப் பார்க்கலாம்.