அடுத்த கட்ட ஆட்டத்தை ஆரம்பித்த அமெரிக்கா - ஈரானை அதிரவைத்த ட்ரம்பின் மிரட்டல்

Donald Trump United States of America Israel Iran Strait of Hormuz
By Shadhu Shanker Sep 01, 2026 08:42 PM GMT
Report

ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீதும், மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படையினர் மீதும் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) மேற்கொண்ட தாக்குதல் முயற்சிகளுக்குப் பின்னர், ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்திய நேரப்படி இரவு 9.30 மணியளவில் ஈரானில் உள்ள இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதலை ஆரம்பித்ததாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) தெரிவித்துள்ளது.

மீண்டும் ஈரானில் தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா : IRGC இலக்குகள் மீது அதிரடி தாக்குதல்

மீண்டும் ஈரானில் தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா : IRGC இலக்குகள் மீது அதிரடி தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணை

இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே அமைந்துள்ள நகரங்களில் நான்கு ஏவுகணைகள் தாக்கியுள்ளதாக ஈரானின் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

சாபஹார் மற்றும் கொனாரக் மாவட்டங்களில் நான்கு ஏவுகணைகள் தாக்கியதாக ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான IRNA, மாகாண அதிகாரி அலி கலீலாபாதியை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளது.

அடுத்த கட்ட ஆட்டத்தை ஆரம்பித்த அமெரிக்கா - ஈரானை அதிரவைத்த ட்ரம்பின் மிரட்டல் | Us Begins Strikes Iran Attacks On American Bases

எனினும், இந்தத் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில், , ஈரானிய துறைமுகங்களுக்கு எதிரான தனது கடற்படை முற்றுகையை அமெரிக்கா தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, பல வாரங்களுக்குப் பின்னர் ஈரான் மீது அமெரிக்கா தனது முதல் தாக்குதலை நடத்தியது. ஈரானுக்குச் சொந்தமான லாரக் தீவில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

 ட்ரம்ப் எச்சரிக்கை

கப்பல் போக்குவரத்து பாதையில் ஈரான் தொடர்ந்து கண்ணிவெடிகளைப் பதிப்பதைத் தடுக்கும் நோக்கில், லாரக் தீவில் இருந்த ஈரானிய ரொக்கெட் ஏவுதளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.

இதற்குப் பதிலடியாக ஈரான், ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை நோக்கி ஏவுகணைகளை ஏவியதாகவும், அவை வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தனது கடற்பரப்புக்கு மேலாக பறந்த ஈரானிய ஆளில்லா விமானம் ஒன்றை இடைமறித்ததாக ஐக்கிய அரபு அமீரகமும் தெரிவித்துள்ளது.

அடுத்த கட்ட ஆட்டத்தை ஆரம்பித்த அமெரிக்கா - ஈரானை அதிரவைத்த ட்ரம்பின் மிரட்டல் | Us Begins Strikes Iran Attacks On American Bases

அமெரிக்காவின் சமீபத்திய தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுக்க வேண்டாம் என ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

“இந்த மிகவும் நியாயமான தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், அது இன்னும் கடுமையான மற்றும் அதிகளவிலான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும். ஆனால், அதுவே மிகப்பெரிய தாக்குதலாக இருக்காது.

மிகப்பெரிய தாக்குதல் இன்னும் காத்திருக்கிறது. அது முடிவடைந்த பின்னர், இஸ்லாமியக் குடியரசு ஈரானில் மிகக் குறைவான பகுதிகளே எஞ்சியிருக்கும்” என ட்ரம்ப் தனது Truth Social பதிவில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் 

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட குண்டுவீச்சுத் தாக்குதல்கள் ஈரானை தோல்வியடைந்த நாடாக மாற்றியுள்ளதாக ட்ரம்ப் திங்கட்கிழமை தெரிவித்திருந்தார்.

ஈரானின் தலைமை அழிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் இராணுவம் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், பொருளாதாரம் சீரழிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

எனினும், மேலும் தாக்குதல்கள் தேவைப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த கட்ட ஆட்டத்தை ஆரம்பித்த அமெரிக்கா - ஈரானை அதிரவைத்த ட்ரம்பின் மிரட்டல் | Us Begins Strikes Iran Attacks On American Bases

“நாங்கள் அவர்களைத் தாக்க மாட்டோம் என்று அதற்கு அர்த்தமல்ல.என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்” என ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த மாதம் ஈரானுக்கு எதிராக பொருளாதார ரீதியான அழுத்தங்களை அதிகரிப்பதில் ட்ரம்ப் நிர்வாகம் கவனம் செலுத்தத் தொடங்கியது.

பல தசாப்தங்களாக அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டு வரும் ஈரானுக்கு எதிராக “பொருளாதார டி-டே” நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ட்ரம்ப் உறுதியளித்திருந்தார்.

ஈரானின் பொருளாதாரத்தில் சரியான இலக்கைத் தாக்கினால், தெஹ்ரானை முறியடையும் நிலைக்குக் கொண்டு வருவது காலத்தின் கேள்வி மட்டுமே என ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்திருந்தது.

மத்திய கிழக்கில் பதற்றம் : அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பதற்றம் : அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US