ஈரானில் தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா : IRGC இலக்குகள் மீது அதிரடி தாக்குதல்
ஈரானில் உள்ள இலக்குகளைத் தாக்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரானில் உள்ள இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக சென்ட்காம் (CENTCOM) தெரிவித்துள்ளது.
ஈரானில் உள்ள இலக்கு
இந்தத் தாக்குதல்கள் கிழக்கு நேரப்படி மதியம் 12 மணிக்கு தொடங்கியுள்ளன.
இன்று கிழக்கு நேரப்படி மதியம் 12 மணிக்கு, அமெரிக்கப் படைகள் ஈரானில் உள்ள இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) இலக்குகள் மீது தாக்குதலைத் தொடங்கின.
Today at 12 p.m. ET, U.S. forces began striking Islamic Revolutionary Guard Corps (IRGC) targets in Iran. The strikes follow recent attempted attacks by the IRGC against commercial shipping in the Strait of Hormuz and against American service members deployed to the region.
— U.S. Central Command (@CENTCOM) September 1, 2026
ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீதும், அப்பகுதியில் பணியமர்த்தப்பட்ட அமெரிக்கப் படை வீரர்கள் மீதும் IRGC சமீபத்தில் நடத்திய தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன என சென்ட்காம் பதிவிட்டுள்ளது.
அமெரிக்க நீதிமன்றத்தில் வெனிசுவேலா முன்னாள் ஜனாதிபதி மனு தாக்கல் - பரபரப்பை ஏற்படுத்திய புதிய நகர்வு