வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் தேவையில்லை : அநுர தரப்பு தெரிவிப்பு
வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு எதிர்க்கட்சிகளின் ஆலோசனை தேவையில்லை என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க ஆயத்தமாகி வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் சில ஆலோசனைகளை வழங்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் ஆலோசனை
எதிர்க்கட்சியினர் ஆட்சி செய்த காலத்தில் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டங்களினால் நாடு வங்குரோத்து அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வங்குரோத்து அடைந்த வரவு செலவுத் திட்டங்களை சமர்ப்பித்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை தேவைப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கங்கள் உரிய முறையில் வரவு செலவுத் திட்டங்களை சமர்ப்பித்திருந்தால் நாடு இந்த நிலையில் இருந்திருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீண்ட கால நோக்கங்கள்
நாட்டை வீழ்ச்சியடையச் செய்தவர்கள் நாட்டை மீட்டெடுக்க முயற்சிக்கும் எமக்கு ஆலோசனை வழங்கி வருகின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு பல்வேறு நலன்களை வழங்கும் வகையில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நீண்ட கால நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட வரவு செலவுத் திட்டம் இம்முறை சமர்ப்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
