லொத்தர் அதிர்ஷ்ட இலாப சீட்டுகளின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை என்பன தமது அதிர்ஷ்ட இலாப சீட்டுகளின் விலைகளை அதிகரித்துள்ளன.
இதற்கமைய 20 ரூபாவாக காணப்பட்ட அதிர்ஷ்ட இலாப சீட்டுகளின் விலைகள் இன்று முதல்(06.07.2023) 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தேசிய லொத்தர் சபை மற்றும் 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அபிவிருத்தி லொத்தர் சபையின் லொத்தர் சீட்டுகளின் விலைகளில் இன்றிலிருந்து மாற்றம் ஏற்படவுள்ளதாக தேசிய லொத்தர் சபையின் தலைவர் சமிர சி யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பரிசுத் தொகை
மேலும், லொத்தர் அதிர்ஷ்ட இலாப சீட்டு முகவர்கள் மற்றும் விநியோக விற்பனை முகவர்களுக்கு வழங்கப்படும் தரகுப்பணம், நூறு சதவீதம் (100%) உயர்த்தப்பட்டு, வெற்றி பெறும் பரிசுத் தொகையும் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாடளாவிய ரீதியில் 100 மாவட்ட விற்பனைப் பிரதிநிதிகளும், 2500 விற்பனைப் பிரதேச பிரதிநிதிகளும், 21000 விற்பனை உதவியாளர்களும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.