எரிபொருள் நிலையத்திற்கு அருகில் கொலை செய்யப்பட்ட இளைஞரின் இறுதி நிமிடங்கள்! சிசிடிவி காணொளி
நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரகொல்ல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நேற்றிரவு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பான சில காட்சிகள் சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளன.
எரிபொருளைப் பெற வந்த மோட்டார்சைக்கிள் ஓட்டுநரான உயிரிழந்த இளைஞர் எரிபொருள் நிரப்புவது உள்ளிட்ட அவரின் இறுதி நிமிடங்கள் பதிவாகியுள்ளன.
இதேவேளை சம்பவத்தையடுத்து அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படும் முச்சக்கரவண்டி சாரதி தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த சம்பவத்தில் கொழும்பு 14 பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சிசிடிவி காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்...
முதலாம் இணைப்பு
நிட்டம்புவ - ஹொரகொல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்திருந்த இளைஞரொருவருக்கும், முச்சக்கரவண்டி சாரதிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் குறித்த இளைஞர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
சம்பவத்தில் கொழும்பு - 14ஐ சேர்ந்த 29 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திலிருந்து சந்தேகநபரான முச்சக்கரவண்டி சாரதி தப்பியோடிய நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளையும் சந்தேகநபரை தேடும் நடவடிக்கையையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.