கனடாவில் பண மோசடியில் சிக்கிய நிஷாந்தன்
கனடாவில் பண மோசடியில் ஈடுபட்ட தமிழ் இளைஞனுக்கு விரைவில் தண்டனை வழங்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பண பரிமாற்ற சேவைகள் வணிக உரிமையாளரான 38 வயதான நிஷாந்தன் குணபாலன் மீது நான்கு குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளன.
RCMP எனப்படும் ரோயல் கனடியன் மவுண்டட் பொலிஸின், ஒருங்கிணைந்த பண மோசடி விசாரணைக் குழு இந்த குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.
குறித்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான தகவல்கள் அனைத்தும் வெளியாகியுள்ளது.
பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியளிப்புச் சட்டம் ஆகியவற்றுக்கு தவறான தகவல்களை தெரிந்தே வழங்கியதாக அவர் 4 குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவாகியுள்ளது.
RCMP விசாரணை பிரிவினால் நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளின் பின்னர் நிஷாந்தன் குணபாலன் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
அடுத்த மாதம் 16ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கமைய அன்றைய தினம் அவருக்கான தண்டனைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.