நிருபமா ராஜபக்ஷவின் சொத்து விவகாரம்! தகவல் அறியும் உரிமை விண்ணப்பம் தாக்கல்
முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவின் (Nirupama Rajapaksa) சொத்து விபரங்களைக் கேட்டு, ஐக்கிய மக்கள் சக்தியின் இளம் உறுப்பினர்கள் குழு தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் ரெஹான் ஜெயவிக்ரமவும் தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்தை தாக்கல் செய்தவர்களில் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையகத்தில், இந்த விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது. 14 நாட்களுக்குள் தேர்தல் ஆணையகத்தால் தகவல் அளிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக ஜெயவிக்ரம கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையம் தகவல்களை சமர்ப்பிக்கத் தவறினால், மேலதிக நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
பண்டோரா பேப்பர்களில், சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பால் பெறப்பட்ட இரகசிய ஆவணங்கள், பல தசாப்த கால உள்நாட்டுப் போரால் நாடு சீரழிந்த நிலையில், நிருபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் கடல் கடந்த அறக்கட்டளைகள் மற்றும் ஷெல் நிறுவனங்களை நிறுவினர் கலைப்படைப்பு மற்றும் ஆடம்பர குடியிருப்புகள் மற்றும் பணம், பத்திரங்கள் மற்றும் பிற சொத்துக்களை ரகசியமாக சேமித்து வைத்தனர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்தில், நடேசன் அவர் மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
