பண்டோரா பேப்பரால் சர்ச்சையில் சிக்கியுள்ள நிருபமா ராஜபக்ச! - அரசு மௌனம் காப்பது ஏன்?
முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ச (Nirupama Rajapaksa) மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் (Thirukumaran Nadesan) தற்போதைய ஆட்சியின் வட்டத்துக்குள்ளேயே உள்ளனர்.
எனவே பண்டோரா பேப்பரால் வெளிப்பட்ட, சொத்துக்கள் தற்போதைய ஆட்சியில் உள்ளவர்களுடையதாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக ஜேவிபி தெரிவித்துள்ளது.
ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) செய்தியாளர் சந்திப்பில் ஒன்றில் இதனை குறிப்பிட்டுள்ளார். நடேசன் ராஜபக்ச ஆட்சியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்.
மல்வானையில் இருந்த சர்ச்சைக்குரிய வீட்டின் பத்திரம், பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானது எனக் கூறப்பட்ட நிலையில் அது நடேசனின் பெயரில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
2015, ஜனவரி 8ம் திகதி அன்று அதிகாரத்தை மாற்றுவது குறித்து விவாதிக்க ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்சவின் இல்லத்திற்கு, நடேசன் உடனேயே சென்றார் என்று திசாநாயக்க கூறினார்.
இலங்கையின் அரசியல்வாதிகளும் அல்லது அவர்களின் நெருங்கிய நண்பர்களும் உலகில் எங்கும் கறுப்புப் பணம் குறித்து வெளிப்படும் அறிக்கைகளில் சேர்க்கப்படுவது பொதுவான நடைமுறையாக உள்ளது.
இந்தநிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பண்டோரா பேப்பர்ஸ் மூலம் அம்பலப்படுத்தப்பட்ட பாகிஸ்தானியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
எனினும் இலங்கையின் முன்னாள் அமைச்சர் குறித்த வெளிப்பாடு தொடர்பாக, ஜனாதிபதி, பிரதமர் அல்லது இலங்கையின் நிதி அமைச்சர் ஆகியோர் எந்த அறிக்கையை வெளியிட தவறிவிட்டனர் என்றும் அனுர குமார திஸாநாயக்க குற்றம் சுமத்தினார்.
தொடர்புடைய செய்திகள்....
Pandora Papers அம்பலப்படுத்திய ரகசியங்கள் - இலங்கையில் சிக்கிய ராஜபக்ஷ குடும்பம்
இலங்கை உட்பட 99 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அதிர்ச்சி - பல ரகசியங்களை அம்பலப்படுத்தும் Pandora Papers

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
