மாவீரர்களின் தியாகம் எம்மை தமிழ்த் தேசிய கொள்கை வழியில் வழிநடத்துகின்றது! தவிசாளர் நிரோஸ்
மாவீரர்களின் தியாகத்தினாலேயே தமிழ் மக்களின் இருப்பு தக்கவைக்கப்பட்டது என தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.
வலிகாமம் கிழக்கு பிரேதச சபையில் மேற்கொள்ளப்பபட்ட அஞ்சலி நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வாழ்வதற்கான உரிமை
அவர் மேலும் தெரிவிக்கையில்,''தமிழ் மக்கள் இந்நாட்டின் தேசிய இனமாக மரபுவழித்தாயகத்தில் வாழ்வதற்கான உரிமையினை இலங்கை அரசு மறுத்தது.

மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தமிழ் மக்கள் மீது பௌத்த சிங்கள பேரினவாதத்தினை கட்டவீழ்த்துவிட்ட போது தமிழ்த் தலைவர்கள் ஜனநாயக ரீதியில் அடக்குமுறைக்கு எதிராகப் போராடினார்கள்.
தமிழ்த் தலைவர்கள் ஜனநாயக அடிப்படையில் போராடியபோது அப்போராட்டம் அரச படைகளால் ஆயுத வன்முறையோடு அடக்கப்பட்டது.
கொட்டும் மழையில் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரால் நனைகிறது கனகபுரம்! ஏற்றப்பட்டது பொதுச் சுடர் - LIVE
இந்நிலையிலேயே ஆயுத வழியிலான விடுதலைப்போராட்டம் தோற்றம் பெற்று தமிழ் மக்களுக்கு என ஒரு தேசத்தினையும் தனியரசையும் இவ் உலகில் உருவாக்க வேண்டும் எனப் போராடி தியாகத்தினை ஈடேற்றியவர்களாக மாவீரர்கள் மீளாத்துயில் கொள்கின்றனர்.
அவர்கள் இந்த தேசத்தில் தமிழ் மக்கள் விடுதலை அடைய வேண்டும் என்பதற்காக உடல், பொருள், ஆவி அனைத்தினையும் அர்ப்பணித்த தியாக சீலர்களாகவுள்ளனர்.
மாவீரர்களின் தியாகம் அவர்களை தெய்வங்கள் என்ற ஸ்தானத்திற்கு முன்னகர்த்தியுள்ளது.
மாவீரர்களின் தியாகம்
விடுதலைப் போராட்டம் அதன் தியாகங்கள் வாயிலாக தமிழ் மக்களின் இருப்பினை இந்தத்தேசத்தில் பாதுகாத்துள்ளதுடன் சர்வதேசமயப்படுத்தியுள்ளது.

தியாகங்களே எம்மை இலட்சியத்தினால் ஒன்றுபடுத்துகின்றது. நாம் இன்றும் எமது உரிமைகளை ஜனநாயக ரீதியில் வென்றெப்பதற்கு மாவீரர்கள் மீது உறுதியுரைத்து இலட்சியத்தினால் ஒன்றுபட்டவர்களாக அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும்.
எமது தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமையினை நாம் எச்சந்தர்ப்பத்திலும் விட்டுக்கொடுக்க முடியாது.
ஓர் இனமாக சகல அரசியல் இடைவெளிகளையும் கடந்து தமிழ்த் தேசிய கொள்கை ஒருமிப்புடன் நாம் செயலாற்ற வேண்டியவர்களாக இருக்கின்றோம். அத் தியாகத்தினை மாவீரர்களது தியாகங்கள் எமக்கு உண்ர்த்தி நிற்கின்றன.'' என தெரிவித்தார்.