நள்ளிரவில் வீடுகளுக்குள் நுழையும் "நிஞ்ஜா" திருடன் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எம்பிலிபிட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களை குறிவைத்து நள்ளிரவில் மர்ம நபர்களால் மேற்கொள்ளப்படும் கொள்ளை சம்பவங்களால் தொடர்பில் யடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
"நிஞ்ஜா" திருடர்கள் என்று அழைக்கப்படும் மர்ம நபர்களால் கொள்ளை சம்பவங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரகசியமாக வீடுகளுக்குள் நுழையும்
இந்த மர்ம நபர், முழு உடலையும் மறைக்கும் வகையில், ஆடைகளையும், முகத்தையும் மறைக்கும் முகமூடிகளையும் அணிந்து, இரகசியமாக வீடுகளுக்குள் நுழைவதை சிசிரிவி கமராக்களில் பதிவாகியுள்ளது.

கையுறைகள் அணிந்து, முதுகில் கட்டப்பட்ட பையில் இருந்து பல்வேறு கருவிகளை எடுத்து, ஜன்னல்களைத் திறந்து வீடுகளுக்குள் நுழைந்து, குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
மேலும், ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்திருப்பதால் தனி நபரின் வேலையா அல்லது ஒரு குழுவின் வேலையா என்ற சந்தேகம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
தாமதமாகி வரும் விசாரணைகள்
குறித்த திருடன் எந்தத் தடையும் இல்லாமல் கொடூரமான நாய்களுடன் வீடுகளுக்குள் நுழைவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொழிலதிபர்கள், சட்டத்தரணிகள் மற்றும் மருத்துவர்களின் வீடுகளில் நுழைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த திருடன் தொடர்பாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும், எம்பிலிப்பிட்டி, இரத்தினபுரி உள்ளிட்ட பல பகுதிகளில் பொலிஸ் அதிகாரிகள் பற்றாக்குறை காரணமாக விசாரணைகள் தாமதமாகி வருவதாகவும் தெரியவந்தது.
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam