நிமேஷின் மரணத்தை தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள்
கடந்த முதலாம் திகதி வெலிக்கடை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 25 வயதுடைய சத்சர நிமேஷ் என்ற இளைஞன் உயிரிழந்த சம்பவத்தினை தொடர்ந்து பொலிஸ் பொறுப்திகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகம் வெளியிட்டுள்ள சிறப்பு செய்தியில் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் அந்த செய்தியில், நிமேஷின் மரணத்தைத் தொடர்ந்து பொலிஸ் தலைமை அதிகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், மேலும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தால், அவர்களுக்கான நடவடிக்கைள் தொடர்பில் குறித்த ஊடகம் கேள்வி எழுப்பியுள்ளது.
பொலிஸ் மரணங்கள்
ஜனவரி 2020 முதல் ஒகஸ்ட் 2023 வரை மொத்தம் 24 பொலிஸ் மரணங்களும், பொலிஸ் துப்பாக்கிசூடுகளின் போது 13 இறப்புகளும் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பெயர் குறிப்பிடமுடியாத அதிகாரி ஒருவரின் கருத்துக்களை அந்த ஊடகம் பின்வருமாறு வெளிப்படுத்தியுள்ளது.
“பொலிஸாரின் சில மிருகத்தனமான செயற்பாடுகளுடன் பல தசாப்தங்களாகப் போராடி வருகிறோம்.
இலங்கையில் பொலிஸ் வன்முறை குறித்த விவாதம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.
2015 ஆம் ஆண்டு மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கை, பொலிஸில் உள்ளவர்களை சித்திரவதை செய்வதில் அதிகாரிகள் வழக்கமாக ஈடுபட்டதாகக் கூறியது.
2023 ஆம் ஆண்டில், இலங்கையின் வடக்கில் உள்ள வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில், சித்தன்கேணியைச் சேர்ந்த 25 வயது நாகராசா அலெக்ஸ் என்ற நபர், தனது கண்கள் கட்டப்பட்டு, அடித்து, பிளாஸ்டிக் பையால் மூடப்பட்டு, உணவு மறுக்கப்பட்டதாகக் கூறும் காணொளிகள் பரப்பப்பட்டன.
சட்டத்தரணிகள் சங்கம்
பின்னர் அவர் காயங்களால் இறந்தார் என கூறப்பட்டது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ராஜீவ் அமாசூரியா குறித்த ஊடகத்துக்கு கருத்து தெரிவிக்கையில்,
“இலங்கையில் பொலிஸ் மிருகத்தனம் "பல தசாப்தங்களாக" ஒரு தொடர்ச்சியான பிரச்சினையாக உள்ளது.
மனித உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதில் உதவுவதற்காக சங்கம் எமது தரப்பு பொலிஸாரை அணுகியுள்ளது.
இது நீண்ட காலமாக நடப்பதை நாம் பார்த்து வருகிறோம், மேலும் இந்த பொலிஸ் மரணங்கள் முடிவுக்கு வருவதற்கான வழிகளையும் வழிமுறைகளையும் நாம் கண்டுபிடிக்க வேண்டும்," என்று அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் வில்லனாக நடிக்கவிருந்தது இவர் தான்.. யார் தெரியுமா Cineulagam
