கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரத்து செய்யப்பட்ட விமானங்கள்: அமைச்சர் வெளியிட்ட தகவல்
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த சில விமானங்கள் அதன் பயணங்களை இரத்து செய்தமை தொடர்பில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா பொதுமக்களிடம் தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.
விமானப் பயணங்கள் இரத்து செய்யப்படுவது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை விமான சேவை அதிகாரசபையின் அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கங்கப் பிரதிநிதிகளுடன் சந்திப்பு நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் எதிர்நோக்கி வரும் அசௌகரியங்களுக்காக ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
விமானப் பயணங்கள் இரத்து
தொழில்நுட்ப கோளாறு காரணமாக அண்மைய நாட்களில் சில விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.
மேலும், நாளாந்த சேவைக்காக 24 விமானங்கள் தேவைப்பட்டாலும் 20 விமானங்களு சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
