உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சுதந்திரக்கட்சிக்கு எதிராக நிமல் சிறிபாலவின் அணி
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து விலகி அரசாங்கத்தில் இணைந்துக்கொண்டுள்ள அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தனது அணி ஒன்றை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நிறுத்தியுள்ளார்.
பதுளையில் டீ சேர்ட் சின்னத்தில் போட்டியிடும் அணி
இதனடிப்படையில் பதுளை மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் டீ சேர்ட் சின்னத்தில் இவரது அணியினர் சுயேட்சைக்குழுவாக போட்டியிடுகின்றனர்.
பதுளை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எதிராகவே நிமல் சிறிபால டி சில்வா தனது அணியை தேர்தலில் களமிறக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதுளை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராவார். இதன் காரணமாகவே தமது மாவட்டத்தில் தனியான அணியை தேர்தலில் களமிறக்கி இருப்பதாக பேசப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கு தனித்து தனது கைச்சின்னத்தில் போட்டியிடுகிறது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
