இந்த அரசாங்கம் விவசாயிகளுக்கு சுமையாகியுள்ளது: ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்
இந்த அரசாங்கம் விவசாயிகளுக்கு சுமையாகியுள்ளதாக ஆளும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ (Nimal Piyathissa) குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசியல் கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கம் விவசாயிகளின் பிரச்சினைகளை சரியாக புரிந்து கொண்டு செயற்படவில்லை. இந்த அரசாங்கத்திற்கு பிரச்சினைகளை உருவாக்குவது வெளிநபர்கள் கிடையாது அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களே.
கொத்தலாவல சட்டமூலம், இரசாயன உரத் தடை, துறைமுகத்தின் மேற்கு முனையம், யுகதனவி மின் உற்பத்தி நிலையம் போன்ற பிரச்சினைகள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தரப்பினரால் உருவாக்கப்பட்டது.
இரசாயன உரப் பயன்பாட்டு தடை ஓர் தூரநோக்கற்ற தீர்மானம்.
சரியாக திட்டமிட்டு நீண்ட கால அடிப்படையில் விவசாயிகளின் நலன்களை கருத்தில் கொண்டு இந்த சேதன பசளை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தால் இவ்வாறான நெருக்கடிகளை அரசாங்கம் சந்தித்திருக்க வேண்டிய நிலை உருவாகியிருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம் News Lankasri
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
வயது என்பது வெறும் எண் மட்டுமே: 33 வயதில் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் களமிறங்கும் வீரர் News Lankasri