பாழடைந்து காணப்படும் வரலாற்று சிறப்புமிக்க நிலாவரை கிணறு! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகத் திகழும் நிலாவரை கிணறு மிகவும் பாழடைந்த நிலையில் காணப்படுவதாக றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையின் குழு தலைவர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தமிழர் பகுதிகளில் உள்ள மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பராமரிக்காமல் பாழடைய விட்டுவிட்டு புதிய கட்டடங்களைக் கட்டுவதால் எந்தப் பிரயோசனமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நிலாவரை கிணறு மிகவும் பாழடைந்த நிலையில் இருப்பதைப் பார்க்கின்ற போது மிகவும் கவலையாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலாவரை கிணறை ஏன் உரிய அமைப்பினர் மற்றும் அரசாங்கம் கவனிக்காமல் உள்ளது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், குறித்த பகுதியை சுத்தம் செய்து சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக மாற்றுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri