திருகோணமலை-நிலாவெளி சிறு மீன் பிடியாளர்களின் கோரிக்கை
திருகோணமலை- நிலாவெளி அடம்போடை பகுதியில் சிறு மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாரத்தை பாதுகாக்குமாறு கோரி கொழும்பு குற்றவியல் திணைக்களத்தில் இன்று(3.1.2025) முறைப்பாடு செய்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரிவித்த சங்கத்தின் தலைவர், நாங்கள் சுமார் 450 குடும்பங்கள் உள்ளோம்.எமது மீன் பிடியை மேற்கொள்ளும் காணியான சுமார் 150 ஏக்கர் காணியை தனிநபரால் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.
இது தொடர்பில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள துறை சார் அதிகாரிகளிடத்தில் முறையிட்டோம். எதுவித பலனும் இல்லை.
முறைப்பாடு
இதனால் கொழும்பு குற்றவியல் திணைக்களத்தில் காணி மோசடி தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளோம்.
மேலும் ஜனாதிபதி செயலகம்,கடற்றொழில் அமைச்சு உள்ளிட்ட முக்கிய அரச திணைக்களங்களிலும் முறையிட்டுள்ளோம்.
இது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தி எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்து தருமாறும் கோரிக்கை விடுக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
தேர்தல் களத்தில் கடும் நெருக்கடி... ஈரான் மீது மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri