உயர் நீதிமன்றில் மன்னிப்பு கோரிய முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் உத்தரவிடப்பட்ட நட்டஈட்டை குறித்த காலக்கெடுவிற்குள் வழங்கத் தவறியமைக்காக, அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன உயர் நீதிமன்றில் மன்னிப்பு கோரியுள்ளார்.
ஜயவர்தன மன்னிப்பு கோருவதற்காக நேற்று (08) உயர் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையானார்.
இதன்போது, நிலந்த ஜெயவர்தன எஞ்சிய இழப்பீட்டு தொகையான 65 மில்லியன் ரூபாயை செலுத்தி விட்டதாக,. அவரின் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர உறுதிப்படுத்தினார்.
விதிக்கப்பட்ட இழப்பீட்டு தொகை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக, முன்னரே நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக 75 மில்லியன் இழப்பீட்டை செலுத்த வேண்டும் என அவருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இதன்படி அவர் ஏற்கனவே 10 மில்லியன் ரூபாவை செலுத்தியிருந்த நிலையில், எஞ்சியிருந்த 65 மில்லியன் ரூபாய்களுடன், தற்போது முழுத் தொகையும் செலுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன உப்பட்டவர்களும், தமக்கு விதிக்கப்பட்ட இழப்பீட்டு தொகைகளை செலுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
