ரணில் குறித்து அன்றே கணித்த அன்ரன் பாலசிங்கம்! இலங்கையில் அடுத்த ஆட்டம் ஆரம்பம் - விரிவாக ஆராயும் நிஜக்கண்
இலங்கை அரசியல் மற்றுமொரு களத்திற்குள் நுழைந்து கொண்டிருப்பதை அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி புடம்போட்டு காட்டத் தொடங்கியிருக்கிறது.
உலக ஓட்டத்தில் கோவிட் என்னும் கொடிய நோய் கோரத் தாண்டம் ஆடிக் கொண்டிருக்கும் நிலையில், இலங்கையை கோவிட் தொற்றும், பொருளாதாரமும் பெரும்பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது.
இதற்கிடையில், இலங்கை அரசியல் வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் நிகழ்வுகள் அண்மைக்காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
குறிப்பாக ஆளும் கூட்டணிக்குள் ஏற்பட்டிருக்கும் அரசியல் சிக்கல் பெரும் பூதாகரமாக மாறிக் கொண்டிருக்கிறது.
அதுமாத்திரமன்றி, பெட்ரோல் விலையேற்ற விவகாரம் பொது மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பில் ஆராய்கிறது இன்றைய தினத்திற்கான நிஜக்கண்,