புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நியமனம்
புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்னர் கந்தளாய் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றியுள்ளார்.
இதேவேளை, பொலிஸ் ஊடகப் பேச்சாளராக இருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ(Nihal thalduwa) அந்தப் பதவியில் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பதவியில் இருந்து நீக்கம்
பொலிஸ் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய காலத்தில் ஊடகவியலாளர்கள் கேட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் தனக்குத் தெரியாது என பதிலளித்த பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ, கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார்.
எனினும், குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக தொடர்ந்தும் பணியாற்றுவார் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |