நைஜீரிய பிரஜைக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு
நைஜீரிய பிரஜை ஒருவருக்கு போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தான போதைப்பொருளான கொக்கைன் போதைப்பொருளை வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றத்திற்காக மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (06.07.2023) தீர்ப்பளித்துள்ளது.
மரண தண்டனை விதிகள்
நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சி போ உச்சயனா என்ற 40 வயது நபருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
27 மே 2016 அன்று ராஜகிரியில் உள்ள உணவகத்தின் முன்பாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் நடவடிக்கையில் 1 மற்றும் 700 கிராம் கொக்கைன் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்த நிலையில் இந்த முறைப்பாடு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டமையினால் குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் மரண தண்டனை விதிகளை ஆராய்ந்து, சந்தேகநபருக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
