சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து வெளியேறும் அதிரடி வீரர்
மேற்கிந்திய தீவுகள்(WI) அணியின் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
29 வயதிலேயே அவர் இவ்வாறு இரசிகர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிக்கோலஸ் பூரன்
உலகின் பல்வேறு டி20 லீக் தொடர்களில் விளையாடியுள்ள நிக்கோலஸ் பூரன்(Nicholas Pooran )மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 167 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அவர் கடைசியாக 2024 டிசம்பர் மாதம் வங்கதேச அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடியிருந்தார்.
ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை 2023 ஜூலையில் கடைசியாக விளையாடியிருந்தார்.டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது இல்லை.
அதிக ஓட்டங்கள்
நிக்கோலஸ் பூரன் 61 ஒருநாள் போட்டிகளில் 1983 ஓட்டங்கள் பெற்றுள்ளார்.
106 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 2275 ஓட்டங்கள் பெற்றுள்ளார். தனது நாட்டு அணிக்காக டி20 போட்டிகளில் எடுத்த ஓட்டங்களை விட ஐபிஎல் தொடரில் அவர் அதிக ஓட்டங்கள் பெற்றுள்ளார்.
ஐபிஎல் தொடரில் அவர் 90 போட்டிகளில் விளையாடி 2293 ஓட்டங்கள் பெற்றுள்ளார்.
முக்கியமான வீரர்
இதேபோல உலகின் பல்வேறு டி20 தொடர்களில் நிக்கோலஸ் பூரன் முக்கியமான வீரராக உள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக 14 போட்டிகளில் 524 ஓட்டங்கள் பெற்றுள்ளார்.
சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றநிலையில் IPL, CPL, MLC போன்ற தொடர்களில் கிரிக்கெட் தொடர்களில் பூரன் முழுவதுமாக கவனம் செலுத்துவார் எனக் கூறப்படுகிறது.



