கேரளக்கடலில் இலங்கை படகிலிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள்! விசாரணைகள் தீவிரம்
மார்ச் 25 ம் திகதி கேரளக்கடலில் வைத்து இலங்கையின் படகு ஒன்றில் இருந்து ஏ.கே .47 ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் மற்றும் 3,000ரூபா கோடி மதிப்புள்ள ஹெரோயின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டமை தொடர்பான விசாரணையை இந்தியாவின் தேசிய புலனாய்வுப்பிரிவு கையேற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை நாட்டின் 6 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரவிஹான்சி என்ற இந்த இலங்கைப் படகில் இருந்து 301 கிலோ ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் படகில் இருந்து ஐந்து ஏ.கே .47 துப்பாக்கிகள் மற்றும் 1,000 9 மி.மீ தோட்டாக்கள் மீட்கப்பட்டன.
இந்த வழக்கு சர்வதேச ரீதியான தீவிரமான தன்மை கொண்டதாக இருப்பதால், இந்த விசாரணையை ஏற்க இந்திய தேசிய புலனாய்வு பிரிவு முடிவு செய்தது.
விசின்ஜாம் கடற்கரையிலிருந்து 225 கிலோமீட்டர் தொலைவில் இந்த படகு இந்திய கடலோர காவல்படையால் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 15 மணி நேரம் முன்

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க Cineulagam
