இலங்கையில் அடுத்து வரும் இரண்டு வார காலப்பகுதி கோவிட் பரவலில் தீவிரநிலையை அடையும் - அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம்
இலங்கையில் அடுத்து வரும் இரண்டு வார காலப்பகுதி கோவிட் பரவலில் தீவிர நிலையை அடையுமென அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த நிலைமை விரைவில் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று எவரும் காத்திருக்க முடியாதென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச்செயலாளர் கலாநிதி நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
ஓன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் இந்த நிலைமை கட்டுக்குள் வராது. எனவே அதனைப் பார்த்துக் கொண்டிருந்தால் நாடு பேரழிவுக்குள் சென்று விடும். இதன் காரணமாக அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இதேவேளை சுகாதார அதிகாரிகளால் மாத்திரமே இந்த நிலைமையைக் கட்டுப்படுத்தமுடியாது. பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும் அந்த தடைகளை மீறும் பல சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.
இதன் காரணமாகப் பொதுமக்கள் தமது சுயக்கட்டுப்பாட்டை இந்த நேரத்தில்
வெளிப்படுத்த வேண்டும் என்று கலாநிதி நவீன் டி சொய்சா கோரிக்கை
விடுத்திருக்கிறார்.