அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்! மொட்டுக்கட்சி வெளியிட்ட தகவல்
"எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் நிறுத்தப்படும் வேட்பாளரே நிச்சயம் வெற்றி பெற்று அடுத்த ஜனாதிபதியாவார்" என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் மீது அடக்குமுறைகள்
"தற்போதைய ஆட்சியின் கீழ் நாட்டில் ஜனநாயக உரிமைகள் படிப்படியாக இல்லாதொழிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் மீது அடக்குமுறைகள் ஏவிவிடப்படுகின்றன.

இத்தகைய ஜனநாயக விரோதச் செயல்களுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து அணிதிரள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
எதிரணிக்குரிய பொறுப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தம்மால் முடிந்தவரை செம்மையாக நிறைவேற்றி வருகின்றது.
தற்போதைய அரசைத் தேர்தல் மூலம் தோற்கடிப்பது எமக்குச் சவாலான விடயமே அல்ல. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையின் கீழ் களமிறக்கப்படும் வேட்பாளரே இந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார் என்பது உறுதி. அதற்கான மக்கள் பலம் இப்போதும் எங்களிடமே உள்ளது." - என்றார்.
தீவிரமடையும் பதற்றத்தினால் மூடப்பட்டுள்ள வான்பரப்புகள்! நூற்றுக்கணக்கான விமானங்கள் தொடர்ச்சியாக இரத்து
விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோரை தொடர்ந்து சூரியுடன் இணையும் இளம் சென்சேஷனல் நடிகை..? யார் தெரியுமா? Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri