1967 ஜனவரி மாதம் 12ஆம் திகதி பிறந்தவரே இலங்கையின் அடுத்த ஜனாதிபதி! பிரபல சோதிடரின் கணிப்பு வெளியானது
1967ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் திகதி பிறந்தவரே இலங்கையின் அடுத்த ஜனாதிபதி என்று பிரபல சோதிடர் சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பலருக்கு அதிருப்தி
கடந்த காலங்களில் அரசாங்கத்தின் முடிவுகள் மற்றும் வெற்றித் தோல்விகள் என்பவற்றை சரியாக கணித்திருந்தார். நாட்டின் ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச தெரிவு செய்யப்படுவார் என்றும், யுத்தத்தை அவரே நிறைவுக்கு கொண்டு வருவார் என்றும் இவர் கணித்திருந்தார்.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெறுவார் என சுமணதாச அபேகுணவர்தன கணித்திருந்த போதும், அந்த கணிப்பை வெற்று மாயையாக மாற்றி வெற்றியை மைத்திரிபால சிறிசேன பெற்றார்.
இந்த சம்பவத்தின் பின்னர் சோதிடர் சுமணதாச அபேகுணவர்தன மீது பலருக்கு அதிருப்தி ஏற்பட்டது.
இந்தநிலையில் வெகு நாட்களில் பின்னர் அவர் தற்போதைய அரசியல் களம் குறித்து தனது கணிப்புக்களை வெளியிட்டுள்ளார். ராஜபக்சவின் ராஜயோகம் முடிந்ததா? ஜனவரிக்கு பிறகு நாட்டுக்கு என்ன நடக்கும்? அடுத்த ஜனாதிபதி யார் ? சஜித்தா? அனுரவா ? நாமலா? ரணிலுக்கு மிக சக்திவாய்ந்த ஜாதகம் உள்ளதா? என்று பல கணிப்புக்களை அவர் வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
தேசிய பட்டியலிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக வந்த ஒருவர் ஜனாதிபதியாக வருவது இதுவே முதல் தடவையாகும். உண்மையைச் சொல்வதென்றால், இந்நாட்டு நாடாளுமன்றத்தில் ராஜபக்சவுக்கு நட்பாக இருந்தவர் ரணில் ஒருவரே.
அடுத்த ஜனாதிபதி யார்?
அதனால் அவருக்கு இப்பதவி வழங்கப்பட்டது. ஒரு வீட்டில் திருடர்கள் புகுந்தால், முதலில் அந்த வீட்டைப் பாதுகாக்கக்கூடிய நபரை அழைப்பார்கள் . அப்படி ஒரு சம்பவம் இங்கு நடந்துள்ளது.
ரணில் விக்ரமசிங்க பிரமராக பதவி ஏற்பதற்கு முன்னர் சஜித் பிரேமதாச மற்றும் சரத் பொன்சேகா உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. எனினும் ராஜபக்சர்களுடன் அரசியல் செய்ய சஜித் பிரேமதாச விரும்பமாட்டார்.
பொன்சேகாவும் அப்படித்தான் . .சஜித் ஒரு நல்ல மற்றும் அறிவார்ந்த தலைவர். எதிர்காலத்தில் அவர் ஒரு சிறந்த தலைவராகவும் வருவார். அவரது தந்தை இந்த நாட்டின் ஏழைகள், ஆதரவற்றோர், அப்பாவி மக்களுக்கு அளவற்ற சேவை செய்த தலைவர்.
இவ்வாறான நிலையில் நான் உண்மையைச் சொல்ல வேண்டும் என நினைக்கின்றேன். இலங்கையின் அடுத்த ஜனவரி மாதம் 12ஆம் திகதி 1967ஆம் ஆண்டு பிறந்தவரே இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக வருவார் என குறிப்பிட்டுள்ளார்.
