பதவியை இராஜினாமா செய்துவிட்டு சர்வகட்சி ஆட்சியை பொறுப்பேற்க வழிவகை செய்யத் தயார்! ரணில்
பதவியை இராஜினாமா செய்துவிட்டு சர்வகட்சி ஆட்சியை பொறுப்பேற்க வழிவகை செய்யத் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலாம் இணைப்பு
ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்கும் யோசனைக்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதன்போது கோட்டா கோ ஹோம் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கு எதிரானது, நோ டீல் கம பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரானது என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்தால் மக்கள் நாடாளுமன்றத்தை தரை மட்டமாக்குவார்கள் என கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய நிலைமை மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கூட்டப்பட்ட கட்சித் தலைவர் கூட்டத்தில் வைத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்கும் யோசனைக்கு சுயாதீன கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது.
மேலும், ஜனாதிபதி - பிரதமர் பதவி விலக வேண்டும் என மைத்திரிபால சிறிசேன கட்சி தலைவர் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.