பொலிஸ்மா அதிபர் பதவிக்கு தேசபந்து தென்னக்கோன்
பொலிஸ்மா அதிபர் பதவிக்கு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நியமிக்கப்படலாம் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிற்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது என ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
நாட்டில் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு நீண்ட காலமாக வெற்றிடம் நிலவி வருகின்றது.
கருத்து முரண்பாடு
பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரட்னவிற்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டு வந்தது. எனினும், அண்மையில் அவர் ஓய்வு பெற்றுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் நியமனத்தில் ஜனாதிபதிக்கும் அமைச்சருக்கும் இடையிலான கருத்து முரண்பாடு காரணமாக நியமனம் காலம் தாழ்த்தப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அரசியல் அமைப்பு பேரவை அனுமதி வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |