IMF வெளியேற்றம்! அடுத்தடுத்து அநுர அரசு எடுக்கப்போகும் அதிரடி முடிவுகள்
2028ஆம் ஆண்டு இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் மிகக் கடுமையான ஆண்டாக அமையும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோ. அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியை கைப்பற்றுவதற்கு கடுமையாகப் போராடும் நிலை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறி ஊடகம் வழங்கும் “ஊடறுப்பு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
IMF திட்டத்திலிருந்து வெளியேறியதன் காரணமாக இலங்கையில் பெரியளவிலான மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. மாறாக, டிட்வா புயல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஜனாதிபதியால் நாட்டை வழங்கிய வாக்குறுதிகளுக்கு ஏற்ப முன்னேற்றப் பாதைக்கு கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள எதிர்க்கட்சிகள் முயற்சிக்கும், வரிகளை குறைப்போம், சம்பள உயர்வுகளை வழங்குவோம், பணவீக்கத்தை கட்டுப்படுத்துவோம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி, ஆட்சியை கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் அவை ஈடுபடும்.
அதேவேளை, ஜனாதிபதி நாட்டு மக்களிடம் இன்னும் ஒரு வாய்ப்பை வழங்குமாறு கோரிக்கை விடுக்கும் நிலையும் ஏற்படலாம் என்றார்.
இவ்வாறான பல்வேறு விடயங்களை உங்கள் கண்முன்னே கொண்டு வருகின்றது “ஊடறுப்பு” நிகழ்ச்சி,
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 17