அடுத்த சில நாட்கள் வாழ்வதும் மிகவும் கடினம்! - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு
எதிர்வரும் சில நாட்கள் மக்கள் வாழ்வது மிகவும் கடினமாக இருக்கும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்நிலையில்.
நாளை (30) மற்றும் நாளை மறுதினம் (31) அரச நிறுவனங்களில் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறைக்கு செல்லுமாறு அரசாங்கத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
"நிலைமை மேலும் மோசமாகி வருகிறது. இதற்கு தீர்வு காண எந்த நிறுவனமும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. நிதி நெருக்கடியால் இந்த மின் நெருக்கடி ஏற்பட்டுள்ளது."
"நாளை மற்றும் நாளை மறுதினம், அரசாங்க நிறுவனங்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலம் இந்த சூழ்நிலையை நிர்வகிக்க நாங்கள் அரசாங்கத்திற்கு பரிந்துரைத்தோம்."
"அடுத்த சில நாட்கள் பொதுமக்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும்." "சுதந்திர வர்த்தக வலயங்களுக்கு மின்சாரம் வழங்கவும் நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம்." என தெரிவித்துள்ளார்.