20க்கு20 கிரிக்கட் தொடரில் இலங்கையை வென்ற நியூஸிலாந்து
சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான 20க்கு 20 கிரிக்கட்டின் இரண்டாம் ஆட்டத்திலும் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
இதன்படி நியூஸிலாந்து அணி 3 போட்டிகளை கொண்ட 20க்கு20 கிரிக்கட் தொடரை 2க்கு0 என்ற அடிப்படையில் வென்றுள்ளது.
45 ஓட்டங்களால் வெற்றி
இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களின் முடிவில் 185 ஓட்டங்களை பெற்றது
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 19.1 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 141 ஓட்டங்களை மாத்திரமே பெற்று ஆட்டத்தில் தோல்வியடைந்தது.
இதன்படி நியூஸிலாந்து அணி, இந்த ஆட்டத்தில் 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
முன்னதாக, கடந்த 28ஆம் திகதி நடைபெற்ற முதலாவது 20க்கு20 ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 8 ஓட்டங்களால் வெற்றி பெற்றிருந்தது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |