நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுள்ள தமிழ் சிங்கள சித்திரைப்புத்தாண்டு நிகழ்வுகள்
மலர்ந்திருக்கும் குரோதி புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியாக உள்ள ஆலயங்களில் விஷேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் (Sri Lanka) நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழும் தமிழ் சிங்கள சித்திரைப்புத்தாண்டு குரோதி வருடப்பிறப்பு நேற்று (13) இரவு 8.15மணிக்கு பிறந்துள்ளது.
மட்டக்களப்பு
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு (Batticaloa) ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.
சுபவேளையில் மாமாங்கேஸ்வரருக்கு மருத்துநீர் வைக்கப்பட்டு விசேட அபிசேகம் நடாத்தப்பட்டதை தொடர்ந்து மாமாங்கேஸ்வரருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றுள்ளன.
செய்தி - குமார்
மலையகம்
மலரந்துள்ள குரோதி வருடத்தினை வரவேற்று மலையக ஆலயங்களில் நேற்று (13) நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கு ஆசி வேண்டி பூஜை வழிபாடுகள்
நடைபெற்றுள்ளன.
ஹட்டன் (Hatton) ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் விசேட பூஜை வழிபாடுகள் ஆலய பிரதம குரு பிரம ஸ்ரீ சந்திராநந்த சர்மா தலைமையில் இடம்பெற்றுள்ளது.
செய்தி - மலைவாஞ்சன்
வவுனியா
புத்தாண்டு தினத்தில் வவுனியா, வைரவ புளியங்குளத்தில் எழுந்தருளியிருக்கும் ஆதிவிநாயகர் திருக்கோவில் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு புத்தாண்டு வழிபாட்டிலும் தேர்திருவிழா வழிபாட்டிலும் ஈடுபட்டுள்ளனர்.
குரோதி புத்தாண்டு தினத்தில் தேர் திருவிழா இடம்பெற்றமையால் வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து மக்கள் வருகை தந்துள்ளனர்.
செய்தி - திலீபன்
மன்னார்
வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் (Mannar) திருக்கேதீஸ்வர ஆலயத்தில் வருடப்பிறப்பை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளது.
செய்தி - ஆஷிக்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |