இளம் பெண்களை மிரட்டி பெருந்தொகை பணம் பெற்ற நபருக்கு நேர்ந்த கதி
இளம் பெண்களை ஏமாற்றி பணம் பறித்த முன்னாள் கடற்படை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கண்டி பிலிமதலாவ பகுதியைச் சேர்ந்தவராகும். அவிசாவளை பகுதியில் மறைந்திருந்த வேளையில் அவரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறையின் அதிகாரியாக தன்னை வெளிப்படுத்திய நபரே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக, கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
பணமோசடி
கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக பணமோசடி தொடர்பான 5 பிடியாணைகளும், போதைப்பொருள் தொடர்பான இரண்டு பிடியாணைகளும் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது.
இளம் பெண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு, அவர்களின் அந்தரங்க புகைப்படங்கள் தம்வசம் உள்ளதாகவும், அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடப்போவதாகவும் மிரட்டியுள்ளார்.
அதனை தவிர்ப்பதாக பணம் வழங்குமாறும் கோரியுள்ளார். இதற்கு பயந்த சில பெண்கள் பெருந்தொகை பணத்தை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பல பெண்கள் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam

ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan

மணிக்கு 160 கிமீ வேகத்தில் ஓடும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.., சோதனை ஓட்டம் நடத்தும் ரயில்வே News Lankasri
