தமிழரசுக்கட்சி தொடர்பாக வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது: கல்முனை வட்டாரக்கிளை விளக்கம்
அண்மைக்காலமாக ஊடகங்களில் தமிழரசுக்கட்சி தொடர்பாக வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது என இலங்கை தமிழரசுக்கட்சியின் கல்முனை வட்டாரக்கிளை குறிப்பிட்டுள்ளது.
குறித்த விடயத்தை நேற்று(12.12.2023) கல்முனை பகுதியில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றவேளை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
இதன் போது கல்முனை தமிழரசுக்கட்சி தொகுதிக்கிளையின் தலைவர் நிதான்சன், செயலாளர் மற்றும் உப செயலாளர் ஆகியோர் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கட்சி தலைமை
“அண்மையில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டம் தொடர்பில் முன்னுக்கு பின் முரண்பாடான செய்திகள் கல்முனை தமிழரசு கட்சி தொகுதி குறித்து வெளியாகி வருகின்றன.
எமது கிளைக்குள் எந்தவொரு முரண்பாடுகளும் இல்லை என்பதோடு கட்சி கட்டமைப்பு அதன் வளரச்சி தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் பல தீர்மானங்களை எடுத்திருந்தோம்.
ஆனால் தற்போது சூடு பிடித்துள்ள கட்சி தலைமை குறித்து இக்கூட்டத்தில் ஆராயப்பட்டவில்லை என்பதை தெரிவிக்க விரும்புகின்றோம்”என குறிப்பிட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 9 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
