இலங்கை பொருளாதாரத்திற்கு பாதிப்பாக அமைந்துள்ள மோடியின் வெற்றி - செய்திகளின் தொகுப்பு
நடந்து முடிந்த இந்திய (India) நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இலங்கையை (Sri Lanka) மேலும் அடிமை நாடாக மாற்றவுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், நாளை மறுதினம் (08) மூன்றாவது தடவையாக பிரதமராக நரேந்திர மோடி (Narendra Modi) பதவியேற்கவுள்ளார்.
நரேந்திர மோடியின் பதவி நீடிப்பு இலங்கையின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் பிரிவின் கலாநிதி அதுலசிறி சமரகோன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சமகாலத்தில் இலங்கை மீது இந்தியா செலுத்தும் அழுத்தம் மேலும் அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,