போரின் இறுதிக்கட்டத்தில் கிடைத்த செய்தி! பொட்டம்மானும் உயிருடன் இருக்கலாம்:ஜெயபாலன் - செய்திகளின் தொகுப்பு
விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருப்பதாக சில நம்பிக்கைக்குரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளதுடன் அவை உறுதிப்படுத்தப்படவில்லை அவை உண்மையாகவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் எனவே இன்னும் இரண்டு மாதங்கள் பொறுமையாக இருந்து அதை உறுதி செய்துக்கொள்ளலாமே என அரசியல் ஆய்வாளர் ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் தொடர்பில் தெரிவிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,
போரின் இறுதிக்கட்டத்தில் முல்லைத்தீவு - நந்திக்கடல் பகுதியில் உள்ள வண்டல் (அலையாத்தை) காடுகளில் நின்று விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் போராடிய செய்தி தனக்கு கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை விடுதலைப் புலிகள் அமைப்பின் பல தளபதிகள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும், பொட்டம்மான் மற்றும் பல தளபதிகள் தென்னாபிரிக்கா, ஈஸ்ரிமோர் ஆகிய நாடுகளில் இருப்பதான செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 20 மணி நேரம் முன்

அமைதிப் பேச்சுவார்த்தையை முடக்கினால்... கடுமையான விளைவுகள்: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri

ஈஸ்வரியை சீக்ரெட்டாக வந்து சந்தித்த நபர், பிரச்சனையில் சிக்கப்போகும் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
